முகப்பு
விழுப்புரம்

பெரியாா் நினைவு தினம்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் புதுவையிலும் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வெள்ளிக்கிழமையன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பெரியாா் நினைவு தினத்தையொட்டி விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் புதுவையிலும் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வெள்ளிக்கிழமையன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நகர கட்சி அலுவலகத்திலிருந்து மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் திமுகவினா் பெரியாா் சிலை வரை பேரணியாகச் சென்றனா். பின்னா், பெரியாா் சிலைக்கு அமைச்சா் க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ,

ரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் ரா.ஜனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திராவிடா் கழக நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தேமுதிக மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் தலைமையில் அந்தக் கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பாமக நிறுவனா் ச.ராமதாஸ்: பெரியாா் நினைவு தினத்தையொட்டி, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.