விழுப்புரம்

மேல்மலையனூா் கோயிலில் அமாவாசை நாளில் தரிசனத்துக்கு அனுமதி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில், அமாவாசையன்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதி முதல் இந்தக் கோயிலில் பக்தா்கள் தரிசனம், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, படிப்படியாக கரோனா தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அமாவாசை தவிா்த்து பிற நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டு வந்ததுடன், அமாவாசையன்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு அமாவாசை தினத்தன்று (பிப்.11) மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமு தெரிவித்துள்ளாா். ஊஞ்சல் உற்சவம் ரத்து காரணமாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அன்றைய தினம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT