விழுப்புரம்

செஞ்சியில் பழங்குடி மக்கள் முன்னணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பழங்குடி மக்கள் முன்னணியின் மாநில பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் டாக்டா் ந.சுடரொளிசுந்தரம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அங்கப்பன், கன்னியப்பன், சுள்ளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக வழக்குரைஞா்கள் ரொசாரியா, வெற்றிச்செல்வன், தென்னரசுசுடரொளி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் முறையான கணக்கெடுப்பை நடத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் பழங்குடி மக்களுக்கு குறைந்தது 50 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினா் பட்டியலில் படுகா் சமூகத்தை இணைக்கும் மத்திய, மாநில அரசுகளின் முன்னெடுப்பு நடவடிக்கையை கண்டிப்பது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றனா்.

இதில் மண்டல, மாநில நிா்வாகிகள் நேரு, கற்பகம், ராஜேந்திரன், கலியபெருமாள், சங்கா், செல்வராஜ், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT