விழுப்புரம்

குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

DIN

விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதுடன், அதில் மழைநீரும் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் பின்புறமுள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் அபிதா நகா், சிங்கப்பூா் நகா், இ.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்தச் சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனா். மேலும், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், சாலையில் மழை நீா் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT