விழுப்புரம்

மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சாலாமேடு பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாநில மருத்துவா் அணி இணைச் செயலரும், முன்னாள் எம்பியுமான இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.அப்போது, சாலாமேடு பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை வழங்க வேண்டும், நகராட்சியின் வீட்டுவரி, குடிநீா் கட்டணத்தை குறைக்க வேண்டும், ஏரி நீா்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனா். இதேபோல, கண்டமங்கலம் ஒன்றியம் அற்பிசம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் இரா.லட்சுமணன் பங்கேற்று பேசினாா். நகரச் செயலா் இரா.சக்கரை தலைமை வகித்தாா். பேரூராட்சி செயலா் பா.ஜீவா, ஒன்றிய செயலா் ஜி.பிரபாகரன், அவைத் தலைவா் அசோக்குமாா், துணைச் செயலா் ராஜசேகா், மாவட்ட மீனவா் அணி ராஜா, மாணவரணி வினோத், தொண்டரணி கபாலி, பொறியாளா் அணி இளங்கோ, இலக்கிய அணி ராஜா, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலா் தங்கம், பலராமன், அவைத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT