விழுப்புரம்

ஆசிரியா் பயிற்சி மாணவியிடம் அத்துமீறல் புகாா்: தலைமை ஆசிரியா் இடமாற்றம்

DIN

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில், ஆசிரியா் களப்பயிற்சி பெறும் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக எழுந்த புகாரில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் தனியாா் ஆசிரியா் பயிற்சி கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவா்கள் குழுவினா், களப் பயிற்சிக்காக (உற்று நோக்குதல் பயிற்சி) கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி எடுத்து வருகின்றனா். இந்த வகையில், பயிற்சிக்குச் சென்ற மாணவிகளில் ஒருவரிடம், அந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் குணசேகரன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தவறான நோக்கில் அத்துமீறி நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக, மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி புதன்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பித்தாா். இதை ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா புகாா் மீதான முதல் நடவடிக்கையாக, தலைமை ஆசிரியா் குணசேகரனை கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்தப் பள்ளியில் களப்பயிற்சி பெற்று வரும் 10 மாணவ, மாணவிகளும் விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சிப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT