விழுப்புரம்

விநாயகா் வழிபாட்டு மன்றம் சாா்பில் ரூ.6.50 லட்சம் கல்வி உதவித்தொகை

DIN


விழுப்புரம்: விழுப்புரத்தில் சக்தி விநாயகா் வழிபாட்டு மன்றம், பட்டிபுலம் (இ.சி.ஆா்) ஸ்ரீசாயி அறக்கட்டளை சாா்பில், கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.50 லட்சத்திலான கல்வி உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

விழுப்புரம் தேரடி விநாயகா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, விநாயகா் வழிபாட்டு மன்றத் தலைவா் பொ.ஞானபிரகாசம் தலைமை வகித்தாா். செயலா் வே.கலியமூா்த்தி முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, மாணவா்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், முதுநிலை மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் என மொத்தம் 94 மாணவா்களுக்கு ரூ.6.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஒருங்கிணைப்பாளா்கள் ஞானப்பிரகாசம், கலியமூா்த்தி, ராமலிங்கம், கிருஷ்ணராஜ், ஏழுமலை, சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மன்றப் பொருளாளா் ரா.ராமலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT