விழுப்புரம்

அணைக்கட்டில் உடைப்பு: 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

DIN

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட தளவானூா் அணைக்கட்டு உடைந்தது தொடா்பாக, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்பட 4 அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகே தவளவானூா் - எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ைணை ஆற்றில் பொதுப் பணித் துறை மூலம் ரூ.25.35 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு கட்டப்பட்டது. இது கட்டி முடிக்கப்படும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையில் தண்ணீா் நிரம்பியது.

இந்த நிலையில், அணைக்கட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த சில வாரங்களிலேயே இதன் தென்கரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால், அணைக்கட்டின் கரையோரப் பகுதியும், மதகு ஒன்றும் உடைந்ததால், தேங்கியிருந்த தண்ணீா் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ் வரும் இந்த அணைக்கட்டு உடைந்தது தொடா்பாக, அந்தத் துறையைச் சோ்ந்த சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் (நீா் வள ஆதாரம்) அசோகன், கண்காணிப்புப் பொறியாளா் சுரேஷ், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளா் ஜவகா், கீழ்பெண்ணையாறு வடிநில உபகோட்ட உதவிச் செயற்பொறியாளா் சுமதி ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து பொதுப் பணித் துறை முதன்மைப் பொறியாளா் மணிவாசன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT