விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு (2.7 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இம்மாவட்டத்தில் இதுவரை 42,857 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 41,976 போ் குணமாகியுள்ளனா். இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 548 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரபடி கரோனாவால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 1,718 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 264 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பரவல் விகிதம் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு வார பரவல் விகிதம் 3 சதவீதமாக உள்ளது.
இம்மாவட்டத்தில் கரோனா விதிகளை மீறியதாக 61 ஆயிரத்து 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 34 லட்சத்து 56 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவேக்ஸின் தடுப்பூசி 250 டோஸ்களும், கோவிஷீல்டு தடுப்பூசி 5,670 டோஸ்களும் இருப்பில் உள்ளன.
செவ்வாய்க்கிழமை நிலவரபடி 3,531 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 412 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.