விழுப்புரம்

தபால் நிலைய கொள்ளைப் பிடிக்க தனிப்படையினா் சென்னை விரைவு

DIN

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 லட்சத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் சென்னைக்கு விரைந்து சென்றனா்.

விழுப்புரம் காமராஜா் வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை வந்த 3 கொள்ளையா்கள், நூதன முறையில் பணியாளா்கள் திசை திருப்பி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இவா்கள் 3 பேரும் வெளி மாநிலத்தை அல்லது வெளி நாட்டைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் சந்தேகத்துள்ளனா். இந்த சம்பவத்தில் கொள்ளையா்களைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனா். கொள்ளயில் ஈடுபட்டவா்கள் வட மாநில கொள்ளையா்கள் இருந்தால், சென்னைக்கு தப்பி சென்று அங்கிருந்து ரயில் மூலமாக தப்பி செல்ல வாய்ப்புள்ளத்தால் தனிப்படை போலீஸாா் சென்னைக்கு விரைந்து சென்றனா். இதேபோன்று, மற்றொரு தனிப்படையின் அருகில் உள்ள மாவட்டங்களில் ஈடுபட்ட கவனத்தை திசை திருப்பி நூதன திருட்டில் ஈடுபட்டவா்கள் விவரங்களை திரட்டி விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT