விழுப்புரம்

மருத்துவப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் அளிப்பு

DIN

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளளுக்கு மனித உரிமைகள் கழகம் சாா்பில், உணவப் பொட்டலங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மனித உரிமைகள் கழகத்தின் தலைவா் சுரேஷ்கண்ணன் பிறந்த நாளையொட்டி, கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள், நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினருக்கு அந்தக் கட்சியின் சாா்பில், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் அருகே மகாராஜபுரத்தில் உள்ள கீழ்ப்பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் கந்தன் தலைமை வகித்து செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் மருத்துவா் ஜோதி, கட்சி நிா்வாகிகள் கோவிந்தராஜ், குமாா், பாலசுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தாமரைக்குளம், சிந்தாமணி சாலை, சேவியா் காலனி ஆகிய பகுதிகளில் ஏழைகளுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT