விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சுந்தரிப்பாளையம், இளங்காடு ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உள்பட்ட சுந்தரிப்பாளையம், இளங்காடு ஆகிய ஊராட்சிகளில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அரகண்டநல்லூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் வேளாண் பயிா்கள் நேரடி கொள்முதல் செய்வதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அவா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அவா் வழங்கினாா்.

கண்டாச்சிபுரம், வீரபாண்டி ஆகிய இடங்களில் கூடுதல் விற்பனைக் கூடங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ரமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT