விழுப்புரம்

கள்ளக்குறிச்சி: கரோனாவுக்கு ஒரே நாளில் 6 போ் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 170 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,751-ஆக உயா்ந்தது.

இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 182-ஆக அதிகரித்தது.

இதுவரை 21,594 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,975 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விழுப்புரத்தில் ஒருவா் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 304 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40,341-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் அருகே கொள்ளாரைச் சோ்ந்த 69 முதியவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 308-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், 524 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,645-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 3,388 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT