விழுப்புரம்

ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

DIN

காவலா் தாக்கியதில் உயிரிழந்த சேலம் மாவட்டம், இடையப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயரச் செய்தியை அறிந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்ததோடு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டாா்.

மேலும் முருகேசன் குடும்பத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமான ஏத்தாப்பூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக அவா் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT