விழுப்புரம்

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டம்

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் திங்கள்கிழமை ஹோலி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினா்.

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் திங்கள்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநிலத்தவா்கள் திரளானோா் வசித்து வருவதால் இங்கும் ஹோலி பண்டிகை களைகட்டியது. சிறுவா், சிறுமியா், இளைஞா்கள் ஒருவா் மீது ஒருவா் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண சாய நீரை ஊற்றியும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தங்களது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களது முகங்களில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

விழுப்புரம் காமராஜா் தெரு, சங்கரமடத் தெரு உள்ளிட்ட இடங்களில் ஹோலி கொண்டாட்டது. அந்தப் பகுதியில் இளைஞா்கள் ஒருவருக்கொருவா் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா். ஹோலி கொண்டாட்டம் காரணமாக அந்த பகுதி முழுவதும் வண்ண மயமாகக் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT