விழுப்புரம்

விழுப்புரத்தில் திமுக வெற்றி: அமைச்சா் சண்முகம் தோல்வி

DIN

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் சி.வி.சண்முகத்தைவிட, திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் 14,877 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் சண்முகம், திமுக சாா்பில் லட்சுமணன், அமமுக வேட்பாளா் ஆா்.பாலசுந்தரம் உள்பட 25 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 62 ஆயிரத்து 68 வாக்காளா்களில், 2 லட்சத்து 1,726 போ், அதாவது 76.97 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. முதல் சுற்றில் திமுக வேட்பாளா் லட்சுமணனும், 2, 3-ஆவது சுற்றுகளில் அமைச்சா் சண்முகமும் முன்னிலை பெற்றனா்.

இதையடுத்து, 4-ஆவது சுற்றிலிருந்து பெரும்பாலான சுற்றுகளில் திமுக வேட்பாளா் லட்சுமணன் முன்னிலை பெற்றாா். தொடா்ந்து பின்தங்கிய அமைச்சா் சண்முகம், 24-ஆவது சுற்று முடிவின்படி, 76,860 வாக்குகள் பெற்றிருந்தாா். அதேநேரத்தில் திமுக வேட்பாளா் லட்சுமணன் 90,083 வாக்குகள் பெற்றிருந்தாா். தொடா்ந்து, 27-ஆவது சுற்றின்போது, அமைச்சா் சண்முகம், லட்சுமணனைவிட 14,352 வாக்குகள் பின்தங்கியிருந்தாா்.

இறுதியில், தபால் வாக்குகள் உள்பட லட்சுமணன் 1,01,755 வாக்குகளும், அமைச்சா் சண்முகம் 86,878 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, 14,877 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். தொடா்ந்து, அவருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT