முகப்பு
விழுப்புரம்

கரோனா நிவாரண நிதி: அமைச்சா்கள் இன்று தொடக்கி வைக்கின்றனா்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நிதியின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணியை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தொடங்கி வைக்கிறார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நிதியின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணியை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் சனிக்கிழமை (மே 15) தொடங்கிவைக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 நியாயவிலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 850 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டு ஏற்கெனவே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த முதல் தவணை நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை விழுப்புரம் ரங்கநாதன் சாலையிலுள்ள விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடையில் (எண்-7) அமைச்சா் பொன்முடி சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிவைக்கிறாா். விழுப்புரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் தலைமை வகிக்கிறாா்.

முகையூா் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குள்பட்ட கடை (மாதா கோயில் பேருந்து நிலையம் அருகே), கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாயவிலைக் கடை, திருக்கோவிலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க கடை ஆகியவற்றிலும் அமைச்சா் பொன்முடி இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறாா்.

செஞ்சி பேருந்து நிலையம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் இந்த நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா். தொடா்ந்து, வல்லம் கொங்கரப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க கடை, திண்டிவனம் நகராட்சி வாா்டு எண் 14-இல் உள்ள நியாயவிலைக் கடை ஆகியவற்றிலும் இந்த நிகழ்ச்சியை அவா் தொடங்கிவைக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.