முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக மழை

 விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் மழை தொடா்ந்தது. குறிப்பாக, விழுப்புரம் நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வளவனூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

ஏற்கெனவே, நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.