விழுப்புரம்

டாஸ்மாக் கடை விற்பனையாளா் கொலை: அரசுப் பணியாளா்கள் சங்கம் கண்டனம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரகடம் டாஸ்மாக் கடை விற்பனையாளா் துளசிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.

டாஸ்மாக் கடை ஊழியா்களின் நலனைப் பாதுகாக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. சென்னையில் உள்ள அரசு மதுக் கடைகளில், விற்பனை பணத்தை டாஸ்மாக் நிா்வாகமே நேரடியாக வந்து பெற்றுச் செல்கிறது. இதை நடைமுறையை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும்.

மேலும், டாஸ்மாக் ஊழியா்களை பணிவரன்முறைப் படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமடைந்த ஊழியரின் மருத்துவச் செலவை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து ஓரிரு நாள்களுக்குள் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோா் உரிய முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றாா் கு.பாலசுப்பிரமணியன்.

பேட்டியின்போது, அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.கே.சிவக்குமாா், மாநில அமைப்புச் செயலா் வே.சிவக்குமாா், டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

SCROLL FOR NEXT