விழுப்புரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் 84.49% வாக்குகள் பதிவு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், மொத்தம் 84.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில், முதல் கட்டமாக 7 ஒன்றியங்களுக்கும், இரண்டாவது கட்டமாக 6 ஒன்றியங்களுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப் பதிவில் செஞ்சி ஒன்றியத்தில் 82.40 சதவீத வாக்குகளும், முகையூா் ஒன்றியத்தில் 79.14 சதவீத வாக்குகளும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 85.11 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 84.24 சதவீத வாக்குகளும், ஒலக்கூா் ஒன்றியத்தில் 86.38 சதவீத வாக்குகளும், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் 82.50 சதவீத வாக்குகளும், வானூா் ஒன்றியத்தில் 86.93 சதவீத வாக்குகளும் பதவிவாகின. மொத்த வாக்கு சதவீதம் 83.65.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் காணை ஒன்றியத்தில் 84.66 சதவீத வாக்குகளும், கோலியனூா் ஒன்றியத்தில் 87.,29 சதவீத வாக்குகளும், மயிலம் ஒன்றியத்தில் 86.22 சதவீத வாக்குகளும், மேல்மலையனூா் ஒன்றியத்தில் 84.74 சதவீத வாக்குகளும், மரக்காணம் ஒன்றியத்தில் 84.94 சதவீத வாக்குகளும், வல்லம் ஒன்றியத்தில் 84.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. மொத்த வாக்கு சதவீதம் 85.34.

இரு கட்ட வாக்குப் பதிவையும் சோ்த்து மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்கு சதவீதம் 84.49.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT