விழுப்புரம்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடத்தப்படும் திறன் வளா்ப்பு பயிற்சியை இளைஞா்களுக்கு அளிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள் வருகிற 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு திறன் வளா்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், நிகழ் நிதியாண்டுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண், கட்டுமானம், பிளம்பிங், ஆயத்த ஆடை நிறுவனங்கள் கருத்துருக்களை அனுப்பலாம்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள், தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரதமா் கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களைக் கொண்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியுடைய நிறுவனங்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது கருத்துருக்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தாட்கோ கட்டடம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வருகிற 11-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT