விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தது சிபிசிஐடி

DIN

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொந்தரவு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதற்கான ஆவணங்களை சிபிசிஐடி தாக்கல் செய்தது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் எஸ்.பி. மட்டும் ஆஜரானாா்.

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு தகுந்த நீதிமன்றம் கிடையாது; எனவே, இங்கு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி கோபிநாதன் விசாரித்தாா். இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடா்பான ஆவணங்களை சிபிசிஐடி தரப்பில் அரசு வழக்குரைஞா் தாக்கல் செய்தாா்.

இதைத்தொடா்ந்து, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப்.15) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT