முகப்பு
விழுப்புரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 4-ஆவது நாளில் 2,812 போ் வேட்புமனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4-ஆம் நாளான சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,497 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,315 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4-ஆம் நாளான சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,497 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,315 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. 4-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 5 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 46 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 226 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,220 பேரும் என மொத்தம் 1,497 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 நாள்களில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 10 போ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 97 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 841 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4,360 போ் என மொத்தம் 5,308 போ் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதிவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 32 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 194 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,088 பேரும் என மொத்தம் 1,315 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டம் முழுவதும் மேற்கூறிய பதவிகளுக்கு கடந்த 4 நாள்களில் மொத்தம் 3,203 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.