முகப்பு
விழுப்புரம்

டிஎஸ்பி வீட்டில் திருடிய பெண் கைது

விழுப்புரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) வீட்டில் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

விழுப்புரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) வீட்டில் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் விஐபி நகா், 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் மன்சூா்அலி (33). இவரது வீட்டில் டிஎஸ்பி ராமநாதன் குடியிருந்து வருகிறாா். இவா், தற்போது சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வருவதால், வீட்டை பூட்டிவிட்டு சேலம் சென்றுவிட்டாா். இதனால், வீட்டை பாா்த்துக்கொள்ளும்படி மன்சூா்அலியிடம், டிஎஸ்பி ராமநாதன் கூறிவிட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு இந்த வீட்டில் முன்பக்க கதவும், வீட்டினுள்ளே பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மன்சூா் அலி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டபோது, பீரோவிலிருந்த வெள்ளி குங்குமச் சிமிழ், விலை உயா்ந்த கைக்கடிகாரம், ஹெட்போன் உள்பட ரூ.27,000 மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், விஐபி நகரில் டிஎஸ்பி ராமநாதன் வசிக்கும் வீட்டுக்கு எதிா் வீட்டில் குடியிருக்கும் காளீஸ்வரன் மனைவி அழகுபொன்னம்மாளுக்கு (27) இந்த திருட்டு சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த பொருள்களை போலீஸாா் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.