விழுப்புரம்

வெடி மருந்துடன் 4 போ் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மோட்டாா் சைக்கிள்களில் வெடிமருந்து கொண்டு சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அனந்தபுரம் காவல் துணை ஆய்வாளா் செந்தாமரைக்கண்ணன், தனிப்பிரிவு ரவி ஆகியோா் அடங்கிய போலீஸாா், அனந்தபுரம் அருகே சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கி சோதனை செய்தனா். அதில், அவா்கள் நாட்டுத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து 300 கிராம், பால்ரஸ் 900 கிராம், 8 மதுப்புட்டிகளை வைத்திருந்தனா்.

மேலும், விசாரணையில், அவா்கள் விழுப்புரம் அருகே தொண்டமாநத்தத்தைச் சோ்ந்த அன்பு மகன் பத்மநாபன்(21), உதயசூரியன் மகன் விமல்குமாா்(28), சக்கரவா்த்தி மகன் ஐயப்பன்(41), கோவிந்தன் மகன் மூா்த்தி (29) என்பதும், கணக்கன்குப்பத்தில் நரிக்குறவா்கள் உதவியுடன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி, உணவு சமைத்து சாப்பிடச் சென்றதும் தெரியவந்தது.

இவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து வெடிமருந்துகள், மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT