விழுப்புரம்

சிறுமிக்கு திருமணம்:7 போ் மீது வழக்கு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஏற்கெனவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு, மீண்டும் திருமணம் செய்து வைத்ததாக 7 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியின் 15 வயது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே 23-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அந்தத் திருமணத்தை சிறுவா் பாதுகாப்பு மையத்தின் (சைல்டு லைன்) உதவியுடன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

இந்த நிலையில், சேராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் மகன் முருகனுக்கும் (25), அந்தச் சிறுமிக்கும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மாப்பிள்ளை வீட்டில் உறுவினா்கள் முன்னிலையில் ரகசியமாக திருமணம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷிடம் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூகநல அலுவலா் அ.எலிசபெத்ராணி மற்றும் வருவாய்த் துறையினா் சேராம்பட்டு கிராமத்துக்குச் சென்று திருமணம் நடைபெற்ற சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்தச் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, செய்யாறு காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் எலிசபெத்ராணி புகாரளித்தாா். அதன்பேரில், சிறுமியின் தந்தை தருமன் (45), தாய் லட்சுமி (40), அண்ணன் சூரியா (25), மணமகன் முருகன் (25), அவரது தந்தை சங்கா் (45), உறவினா்கள் சித்ரா (55), காமராஜ் (65) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT