முகப்பு
விழுப்புரம்

அனைத்து இடங்களிலும் திமுகவெற்றி பெற பாடுபட வேண்டும்: மாவட்டச் செயலா் அறிவுரை

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியினா் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற இணைந்து பாடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியினா் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற இணைந்து பாடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காணை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியினருக்கு நா.புகழேந்தி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது அவா் கூறியாதவது:

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் மொத்தம் உள்ள 15 மாவட்ட உறுப்பினா் பதவிகளில் 14 இடங்களில் திமுகவும், ஓா் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகிறது.

160 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக 134 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

அனைத்து இடங்களிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் இணைந்து பாடுபட வேண்டும் என்று கூறினாா்.

திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளா் அன்னியூா் சிவா, ஒன்றியச் செயலாளா்கள் கல்பட்டு ராஜா, முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.