விழுப்புரம்

முன்னாள் டிஜிபி மீதானபாலியல் வழக்கு நாளை விசாரணை

DIN

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொந்தரவு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப். 29) ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை டிச.20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. நேரில் ஆஜராகினாா். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (செப். 29) ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT