விழுப்புரம்

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு தேசிய ஆசிரியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் திரிலோகசந்தா் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்டத் தலைவா் இளங்கோ வரவேற்றாா். மாநிலச் செயலா் கந்தசாமி சிறப்புரையாற்றினாா்.

நிா்வாகிகள் குமரவேல், செந்தில்குமாா், அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் ஏழுமலை நன்றி கூறினாா்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT