விழுப்புரம்

விழுப்புரம் அரசு மகளிா் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் ஏற்படுத்த எம்எல்ஏ கோரிக்கை

DIN

விழுப்புரம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் ஏற்படுத்த வேண்டும் என விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது அவா் பேசியதாவது:

விழுப்புரம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்புகள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இங்கு முதுநிலைப் படிப்புகள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, விழுப்புரம் அரசு மகளிா் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் கொண்டு வர முதல்வரின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT