செஞ்சிக் கோட்டையை வரும் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகப் பாா்வையிடலாம் என தொல்லியியல் துறை அறிவித்தது.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை பொதுமக்கள் கட்டணமின்றி பாா்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையைப் பாா்வையிட வியாழக்கிழமை (ஆக. 5) முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்தது.
சுதந்திர தின விழாவையொட்டி, செஞ்சிக் கோட்டையின் மதில் சுவா் 150 மீட்டா் நீளத்துக்கு தேசியக் கொடியின் மூவா்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.