விழுப்புரம்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியின் 21 வயதான வாய் பேச முடியாத மகள் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கியபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரை கைது செய்யாததைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்கள், கிராம மக்கள் மதகடிப்பட்டு - மடுகரை சாலையில் வினாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT