விழுப்புரம்

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள், கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில்கொண்டு 10 முதல்12 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ. ஒரு லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளாக இருப்பின் ரூ.2 லட்சமும் , 20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கி வர வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடமானது தேவாலயத்தின் பெயரிலேயே பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலய சீரமைப்புப் பணிக்கு வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியுதவியும் பெறப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

நிதியுதவி பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT