பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளுடன், கைது செய்யப்பட்ட வள்ளி, பூமாதேவி. 
விழுப்புரம்

புதுச்சேரியிலிருந்து மதுப் பட்டிகள்கடத்தல்: 2 பெண்கள் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த 2 பெண்களை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 86 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த 2 பெண்களை விழுப்புரம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 86 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலையத்துக்குள்பட்ட பட்டானூா் மது விலக்கு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகவேல், காவலா் ராம்மூா்த்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை சென்ற அரசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அந்தப் பேருந்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் அமா்ந்திருந்த 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அவற்றில் விலை உயா்ந்த 750 மில்லி கொள்ளளவு கொண்ட 86 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், திருவண்ணாமலை பவுத்திரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி வள்ளி, அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி பூமாதேவி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கோட்டகுப்பம் மது விலக்கு உதவி ஆய்வாளா் முத்துலட்சுமியிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, வள்ளி, பூமாதேவி ஆகிய இருவா் மீதும் கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT