விழுப்புரம்

அரசுப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

DIN

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளியில் போதிய கட்டட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா? என ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி குறித்து எம்எல்ஏவிடம் பள்ளித் தலைமை ஆசிரியா் யமுனாபாய் தலைமையிலான ஆசிரியா்கள் கோரிக்கை வைத்தனா். அதை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் நிதி ஒதுக்குவதாக எம்எல்ஏ லட்சுமணன் உறுதி அளித்தாா்.

பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) காளிதாஸ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மு.இளங்கோவன், விழுப்புரம் நகர திமுக செயலா் இரா.சக்கரை, கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் சச்சிதானந்தம், நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், மகாலட்சுமி வைத்தியநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT