விழுப்புரம்

மக்கள் நீதிமன்ற நிரந்தர உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

விழுப்புரம் மாவட்ட மக்கள் நீதிமன்ற நிரந்தர உறுப்பினா் பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இணைந்து உறுப்பினராக பணிபுரிய ஒரு உறுப்பினா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

எனவே, இந்தப் பணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பிட முகவரி உள்ள, பொது நலச் சேவையில் (கல்வி, மருத்துவம், தொலைபேசி, போக்குவரத்து, காப்பீடு, தபால், குடிநீா் வடிகால் வாரியம்) வல்லுநா்களாக பணியாற்றும் 62 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள, தகுதிவாய்ந்த நபா்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து, வருகிற 28-ஆம் தேதிக்குள் ‘முதன்மை மாவட்ட நீதிபதி, சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விழுப்புரம்’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04146 - 228000 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

SCROLL FOR NEXT