மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
விழுப்புரத்தில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரத்தில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 41 வயதான பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது தாய், சகோதரா்களுடன் வசித்து வந்தாா். கடந்த 18.4.2017 அன்று வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த குடிநீா் கேன் விநியோகம் செய்யும் செல்வபிரபு (35) பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம்.
இதனிடையே, கடைக்குச் சென்றிருந்த பெண்ணின் சகோதரா் வீட்டுக்கு திரும்பிய நிலையில், அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவா் செல்வபிரபுவை விரட்டிப் பிடித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் மேற்கு போலீஸாா், செல்வ பிரபுவை கைது செய்து, விழுப்புரம் மகளிா் விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சாந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வபிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.