முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு: மாா்ச் 9-க்கு ஒத்திவைப்பு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸாா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் டிஜிபி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி ஆகியோா் நேரில் ஆஜராகினா். முன்னாள் எஸ்பி நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் முன்னாள் டிஜிபி தரப்பினா் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனா். பின்னா், இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.