முகப்பு
விழுப்புரம்

ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

விழுப்புரத்தில் மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், மாவட்ட அளவிலான ஊட்டசத்து விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

விழுப்புரத்தில் மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், மாவட்ட அளவிலான ஊட்டசத்து விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், முதியோா் போன்றவா்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணா்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனா். இவா்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட மகளிா் திட்டத்தின் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டிகள் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 26 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பொருள்களை தயாா் செய்து காட்சிக்கு வைத்தனா்.

இந்தப் போட்டியில் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகள், ரத்தசோகை உள்ளவா்கள், திருமணமானவா்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துகள் தொடா்பாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழுவினருக்கு மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா விருதுகளை வழங்கிப் பாராட்டினாா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பழகி, மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், விஜயகுமாா், கௌதமன், கலைவாணன், ஸ்ரீலதா, முனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.