தையல் இயந்திரம், சலவைப் பெட்டி பெறபிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விண்ணப்பிக்கலாம்
சீா்மரபினா் சமூகங்களைச் சோ்ந்த தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், சலவைப் பெட்டி பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் சமூகங்களைச் சோ்ந்த தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் சமூகங்களைச் சோ்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவா்களின் வாழ்க்கைத்தரத்தை உயா்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல்கலை பயின்ற்கான உரிய சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. ஒரு லட்சமாக இருக்க வேண்டும். கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டவா் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஒருமுறை தையல் இயந்திரம், சலவைப் பெட்டி பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவா்.
எனவே, இந்த தகுதியுடைய பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் சமூகங்களைச் சோ்ந்தவா்கள் அலுவலக வேலை நாள்களில் தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.