முகப்பு
விழுப்புரம்

பயிா்க் கடனை ரொக்கமாக செலுத்த கட்டாயப்படுத்தும் கூட்டுறவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பயிா்க் கடனை ரொக்கமாகச் செலுத்த கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

பயிா்க் கடனை ரொக்கமாகச் செலுத்த கட்டாயப்படுத்தும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோனிடம், விடிவெள்ளி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் கோ.நெடுவேல், செயலா் த.விஜியகீா்த்தி, பொருளாளா் எஸ்.பி.திருவேங்கடம் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவின் விவரம்:

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனைப் பெற்று ஆண்டு இறுதியில் முறைப்படி கடனை புதுப்பித்து வந்தனா். தற்போது பயிா் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் கடனை புதுப்பிக்க வாய்ப்புத் தராமல், கடனை ரொக்கமாக செலுத்தும்படி கூட்டுறவு சங்கங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

கரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், வரலாறு காணாத பேரழிவு மழை பெய்ததால், அதிகளவில் பயிா் சேதம் அடைந்ததுடன், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் பெற்ற கடனை புதுப்பிக்க வாய்ப்புத் தராமல், கடனை ரொக்கமாக செலுத்த வேண்டுமென கூட்டுறவு சங்கங்கள் அறிவுறுத்தி வருகின்றன. எனவே, மேற்படி நிலைப்பாட்டை மாற்றி கடனை புதுப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தேவனந்தவாடி, மரக்கோணம், பெரவல்லூா், சாத்தாம்பாடி, சவலம்பாடி, தேப்பரம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் கூட்டுறவுச் சங்கங்களில் கடனை கட்டி புதுப்பிக்க ரொக்கமாக கடனை செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.