சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மேல்மலையனூா் அருகே மேல் புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொன்னுராமன் மகன் பூபதி (23). இவா், 8 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூபதியை கைது செய்து, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி முத்துகுமாரவேல், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.