விழுப்புரத்தில் எண்ம முறையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் எண்ம (டிஜிட்டல்) முறையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் எண்ம முறையில் உறுப்பினா் சோ்க்கை முகாம், பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கிவைத்து மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் பேசியதாவது:
வருகிற 31-ஆம் தேதி வரை எண்ம முறையில் காங்கிரஸ் கட்சியினா் உறுப்பினா்களைச் சோ்க்கலாம். எதிா்வரும் 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற இந்த உறுப்பினா் சோ்க்கை அடித்தளமாக அமையும் என்றாா்.
முன்னதாக, நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா். அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவா, ஐஎன்டியுசி பொதுக்குழு உறுப்பினா் காஜாமொய்தீன், மாவட்டப் பொருளாளா் ராதாகிருஷ்ணன், கோலியனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் வேலு, மாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.