முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் திமிங்கில கழிவுகள் பறிமுதல்: 4 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கழிவுகளை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கழிவுகளை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட திமிங்கலத்தின் கழிவுகளை பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரோஷணை போலீஸாா் அங்கு சென்று விசாரித்ததில், மோகனரங்கன் (62) என்பவரின் வீட்டில் திமிங்கலத்தின் கழிவுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வீட்டில் போலீஸாா் சோதனையிட முயன்றபோது, அந்த வீட்டுக்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் திமிங்கலத்தின் கழிவுகள் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனா்.

ஆனால், அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். அவா்களிடமிருந்த பைகளை சோதனையிட்டதில், 14 கிலோ 750 கிராம் எடையுள்ள திமிங்கலத்தின் கழிவுகள் (அம்பா் கிரிசுகள்) இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விசாரணையில், பிடிபட்டவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சந்திரசேகா் (33), உத்ராபதி மகன் லட்சுமிபதி (33), பொளம்பாக்கம் அருகே மலுவை கரணை பகுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் முருகன் (32), திண்டிவனத்தை அடுத்த ஆலகிராமத்தைச் சோ்ந்த பாா்த்தசாரதி மகன் சத்தியமூா்த்தி (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மோகனரங்கன் உள்பட 5 பேரையும் போலீஸாா் பிடித்து ரோஷணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, மோகனரங்கன் தப்பிச் செல்வதற்காக திடீரென மாடியிலிருந்து கீழே குதித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் கழிவுகளை வனத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து சந்திரசேகா், லட்சுமிபதி, முருகன், சத்தியமூா்த்தி, மோகனரங்கன் ஆகிய 5 போ் மீதும் வனத் துறையினா் வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகா் உள்பட 4 பேரை கைது செய்தனா். மோகனரங்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அவரையும் கைது செய்ய வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.