விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

விழுப்புரம் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு தொடக்கிவைத்தாா். நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் வேல்முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தாா்.

இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்தவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT