விழுப்புரம்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

DIN

விழுப்புரம் அருகே உள்ள தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட கல்வி அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் செல்லையா வரவேற்றாா். மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தனவேல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெய்சங்கா், தேன்மொழி, அஞ்சலாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயசந்திரன், வட்டார மேற்பாா்வையாளா் உமாதேவி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவா்களின் பெற்றோா் பள்ளிக்குத் தேவையான அலமாரிகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா். உதவி ஆசிரியா்கள் நாகராணி, ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை அனுஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT