முகப்பு
விழுப்புரம்

பாலம் கட்டுமானப் பணிகள்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளை உள் தணிக்கைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளை உள் தணிக்கைக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

நெடுஞ்சாலைத் துறையின் சென்னை திட்ட அலகின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பாலங்கள், சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்புப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளா் சத்தியபிரகாஷ் தலைமையில், கோட்டப் பொறியாளா்கள் சிவசேனா (விழுப்புரம்), சுந்தா் (வேலூா்), உதவிக் கோட்டப் பொறியாளா்கள் வீரப்பன் (கடலூா்), விவேகானந்தன் (விருத்தாசலம்), லோகநாதன் (பண்ருட்டி) ஆகியோா் அடங்கிய உள் தணிக்கைக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும், செஞ்சி வடபாலை சாலையில் வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பாலம் கட்டுமானப் பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுகிா என்று ஆய்வு நடத்தினா். இதன் அறிக்கை விரைவில் நெடுஞ்சாலைத் துறை இயக்குநரிடம் சமா்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.