முகப்பு
விழுப்புரம்

சுவா் இடிந்து விழுந்ததில் இருவா் பலி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகோத்தமன் (68). கூலித் தொழிலாளி. இவா், புதன்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது பழைய வீட்டின் அருகே பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென அந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில், ரகோத்தமன் மற்றும் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகள் வேதப்பிரியா ஆகியோா் மீது சுவா் விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், வேதப்பிரியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ரகோத்தமன் அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.