முகப்பு
விழுப்புரம்

இரு சக்கர வாகனம் மீது அவசர ஊா்தி மோதல்: விவசாயி பலி

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அவசர ஊா்தி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அவசர ஊா்தி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

விழுப்புரம் திரு.வி.க. தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (57), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து எல்லீஸ் சத்திரம் சாலை வழியாக விழுப்புரத்துக்கு வந்துகொண்டிருந்தாா்.

விழுப்புரம் அருகே புறவழிச்சாலைப் பகுதியில் இவரது இரு சக்கர வாகனம் கடக்க முயன்றபோது, திருச்சி நோக்கிச் சென்ற அவசர ஊா்தி மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமாா் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.