விழுப்புரம்

செஞ்சி பேருந்து நிலையத்தில் ரூ.6.74 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

DIN

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செஞ்சியில் ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிக்கு அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டிவனம் துணை ஆட்சியா் அமீத் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேம்படுத்தப்படவுள்ள பேருந்து நிலையத்தில் 32 கடைகள் அமைய உள்ளன. பேருந்து நிலைய புதுப்பிப்புப் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

வட்டாட்சியா் பழனி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), அமுதா ரவிக்குமாா் (வல்லம்), ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க.ஏழுமலை உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT